• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அமலாபாலுக்கும் கோல்டன் விசா

கடாவர், ஆடு ஜீவிதம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட பல படங்களில், பல மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். ரஞ்சிஷ் ஹி சாஹி என்ற வெப்சீரிஸ் மூலம் இந்தியிலும் நடித்துள்ளார் இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு நாட்டை சேர்ந்த பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.

நடிகை அமலாபாலும் இந்த விசாவை பெற்றுள்ளார்.இதுப்பற்றி அவர் கூறுகையில், “இப்படிப்பட்ட கவுரவத்தை பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன்.

இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்கு சென்று வருவேன். இது அழகு மற்றும் ஆடம்பரமான அம்சங்களைப் பற்றியது மதிப்பீடானதல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் பார்வை மற்றும் குறிக்கோள் எந்தளவு ஆக்கபூர்வமானதாகவும் மற்றும் நேர்மறையானதாகவும் உள்ளது என்பதே ஆகும். இங்குள்ள மக்கள் அவர்கள் குணத்தால் பெரும் ஆச்சரியம் அளிக்கிறார்கள். இந்த அற்புதமான பாக்கியத்தை எனக்கு வழங்கியதற்காக துபாய் அரசு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அமலாபால்.