• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

Byவிஷா

Apr 9, 2025

தொடர்ந்து 2, 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8290-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.102-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,02,000-க்கும் விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000ூ கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சற்றே ஆறுதல் தரும் விதமாக கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280, ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. நேற்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 வரை சரிந்தது.
இவ்வாறாக, தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.