• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் சரிவு

Byவிஷா

Nov 11, 2024

தங்கம் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.57,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 440 வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 55 ரூபாய் வரையில் குறைந்து 7,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7,725 ரூபாயாகவும், ஒரு சவரன் 61,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 102 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.