சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 63, 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலை இந்தியாவில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பிப்ரவரி14-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7,990 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 63,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 15-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. இதனால் ஒரு கிராம் 7,890 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 400 உயர்ந்துள்ளதால்
ஒரு சவரன் 63,520 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.