• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மீண்டும் 42ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை : இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

Byவிஷா

Mar 13, 2023

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் 42,000 கடந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதைப்போல ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.