• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

திருப்பரங்குன்றத்தில் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி தெய்வானை

Byதரணி

Jan 25, 2023

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி சுப்பிரமணியசுவாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத் திருவிழாவின் நாலாம் நாள் நிகழ்ச்சியாக காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானை தங்கச் சப்ரத்தில் புறப்பாட்டு எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இன்று மாலை திருவாச்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும் அதனை தொடர்ந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானை அருள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.