• Thu. Apr 24th, 2025

தேவி பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ந்தது.

குமரி அம்மன் நவராத்திரி விழாவின் மிகவும் முக்கியமான நிகழ்வு பரிவேட்டை என்பது. இதன் அய்தீகம். நவராத்திரியின் 9-நாட்களிலும் தேவி கடுமையான தவம் புரிந்து “பாணாசுரன்” என்ற அரக்கனை வதம் செய்ய வெளிகுதிரை வாகனத்தில் எலுமிச்சை மாலைகள் அணிந்து எழுந்தருளி. கன்னியாகுமரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகாதானபுரம் என்னும் இடத்திற்கு சென்று பாணாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்தபின், வெற்றியாளராக வெள்ளி பல்லாக்கில் கன்னியாகுமரிக்கு திரும்பி வருவது என்ற அய்திகத்தின் இன்னுமொரு நோக்கம்.

மன்னர்கள் ஆட்சியின் போதும், அதற்கு பின் வந்த வெள்ளையர் ஆதிக்க காலத்திலும், உயர் குல மக்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று தெய்வத்தை வழிபட முடியும் என இருந்த காலத்தில். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நவராத்திரி விழாவின் கடைசி நாளில். மகாதானபுரம் பகுதிக்கு தேவி பகவதி எழுந்தருளி பவனி வரும் பகுதி முழுவதும். கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்கள் கூட்டமாக தேவி பகவதியை தரிசிக்கும் நிகழ்வாகவும் இருந்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் ஆலைய பிரவேசம் அளிக்கப்பட்ட நிலையிலும், இன்றும் பரிவேட்டை நிகழ்வை காண சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் பங்கேற்று அன்னை பகவதியை தரிசனம் செய்கின்றனர். குமரி பகவதியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அணி வகுப்பு மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ், அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலாளர் பாபு,தாமரை பாரதி, இளைஞர் அணி செயலாளர் அசோகன். அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பரிவேட்டை நிகழ்வைக் கண்டு களித்தனர்.

பரிவேட்டை ஊர்வலம் காரணமாக, கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள நினைவிடங்களுக்கு செல்லும் படகு போக்குவரத்தும் இன்று மதியம் 12 மணியோடு நிறுத்தப்பட்டது.போக்குவரத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.