• Wed. Oct 4th, 2023

கம்யூனிஸ்டுகளின் கடவுள் காரல் மார்க்ஸ்

தற்போது உள்ள இளைய சமுதாயம் கொண்டாடும் தலைவர்களில் ஒரு காரல் மார்க்ஸ். கம்யூனிசத்தை உலகறிய செய்தவர்.காரல் மார்க்ஸ்க்குமுன்பு பலர் கம்யூனிசம் பேசி இருக்கலாம்.ஆனால் காரல்மார்க்ஸ்க்கு பிறகு அது தீவிரமடைந்தது. புரட்சி என்ற ஒரு வார்த்தைக்கு உயிரூட்டி ரத்தமும் சதையுமாய் இன்றளவும் துடிக்க வைத்துக்கொண்டிருப்பதில் கார்ல் மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் காரல்மார்க்ஸ்சின் இந்த அறைகூவல் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் தட்டி எழுப்பியது.
காரல் மார்க்ஸ்சின் சில தத்துவ வரிகளை பார்க்கலாம்.

என்றும் நினைவில்
வைத்துக்கொள் மனிதனாக
பிறந்தவன் பயனின்றி
அழிய கூடாது.

உழைப்பு தான் எல்லா
செல்வங்களுக்கும்
மதிப்புகளுக்கும் மூலதனம்.

எந்தவொரு பிரச்சனையாக
இருந்தாலும் அதன் வேரில்
இருந்து தொடங்குங்கள்.. அதுவே
அதை தீர்ப்பதற்கான எளிய வழி.

காரணங்களும் விளக்கங்களும்
சொல்ல தொடங்கினால்
உன்னால் எந்த ஒரு இலட்சியத்தையும்
அடைய முடியாது.

பிரச்சனையின் வீரியம்
அதிகரிக்கும் பொழுது தான்
அதிலிருந்து வெளிவருவதற்கான
எளிமையான வழிகள்
நம் கண்களுக்கு
தெரிய தொடங்கும்.

ஒரு சமூகத்தின் பெண்களின்
நிலை கொண்டே அந்த
சமூகத்தின் தரம்
மதிப்பிடப்படும்.

பசியால் இருப்பவனுக்கு
மீன் பிடித்து கொடுத்தால்
அவன் ஒருநாள் பசி ஆறும்..
மீன் பிடிப்பது எப்படி என்று
சொல்லிக் கொடுத்தால்
அவன் வாழ்நாள் முழுவதும்
பசி தீரும்.

பொது வாழ்வில் ஈடுபடுவோர்
விமர்சனத்தை கண்டு
அஞ்சக்கூடாது.

என்னை யாரும்
ஏற்றுக்கொள்ளவே இல்லையே
என்று நீ ஏங்கும் ஒவ்வொரு
தருணத்திலும் உன்னை
நீ இழந்து கொண்டிருக்கிறாய்.

உண்மையான போராளி
என்றும் மரணிப்பதில்லை..
தன் எழுத்துக்களின் மூலமும்
தன் சிந்தனைகள் மூலமும்
என்றும் அழியாமல் வாழ்ந்து
கொண்டே இருப்பான்.

நீதி மன்றம் சந்திக்க வேண்டிய
இன்னோரு நீதிமன்றம்
மக்கள் கருத்து..!

தத்துவ ஞானிகள் உலகத்தை
பல்வேறு வழிகளில்
விளக்கியுள்ளனர்.. ஆனால்
அதை மாற்ற வேண்டியது தான்
இப்போதைய கடமை.

கற்றவர்களிடம் கற்பதை விட
கற்றுக் கொண்டிருப்பவர்களிடம்
கற்றுக்கொள்.

வரலாறு மீண்டும் மீண்டும்
நிகழ்கிறது முதலில் சோகம்
இரண்டாவது கேலிக்கூத்து.

தன் இலட்சியத்தை
அடைவதற்கான ஒரு மனிதனின்
சளைக்காத போராட்டமே
பிற்காலத்தில் மற்றவர்களால்
வரலாறாக படிக்கப்படுகின்றது.

உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்த தீபத்தில் மற்றவர்கள்
மெழுகுவர்த்திகளை
ஏற்றிக்கொள்ளட்டும்.

நீங்கள் பயனில்லாமல்
கழிக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்க்கையில் மீண்டும்
பெற முடியாத உயர்ந்த
செல்வமாகும்.

ஆழ்ந்து சிந்தித்து
முடிவெடுப்பவனே
வெற்றிகரமான மனிதனாக
விளங்க முடியும்.

நிலைமையை மட்டும்
மாற்றினால் போதாது
நீங்களும் மாற வேண்டும்.

மாற்றங்கள் நிச்சயம்
தவிர்க்க முடியாதவை
எதிர்கொள்ள மனஉறுதி
வேண்டும்.. மாற்றம்
என்பதை தவிர மாறாதது
இந்த உலகில் இல்லை.
விஞ்ஞானம் என்பது

அழியா ஒளி அறியாமை
என்னும் திரைக்கு
பின்னால் ஒளிர்கிறது.

மனித நேயமும்
சர்வாதிகாரமும் மிகுந்து
வெளிப்படும் மனமே
சமூகத்தை மாற்றியமைக்கும்
சக்தி பெற்றது.

சிந்தனையாளர்கள் பலரும்
உலகத்தை விளக்குவர்களாக
இருக்கிறார்கள்.. ஆனால்
நமது வேலை உலகத்தை
மாற்றி அமைப்பது தான்..!

சமுதாய ரீதியில் துணிந்து
செயலாற்றும் சக்தி படைத்த
வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.

இதுவரை இருந்து வரும்
சரித்திரமெல்லாம் வர்க்கப்
போராட்டங்களின் சரித்திரமே.

முதலாளித்துவ
தனிச்சொத்துடைமை முறையின்
சாவு மணி கேட்கும்..
சுரண்டுபவர்கள்
சுரண்டப்படுவார்கள்.!

இந்தியாவிலும் கம்யூனிஸத்தை ஏற்றுகொண்டனர் ஆனால் அதற்கான செயல்திட்டம் வேறுவிதமாக மாற்றப்பட்டது. இதற்கு உதாரணமாக மாவோவின் கூற்றை நியாபகபடுத்த விரும்புகிறேன். நாம் மார்க்சியம் , லெனினிசம் கொஞ்சம் படித்துள்ளோம் ஆனால் அது மட்டுமே பயன்படாது.சீனாவின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் நான் படித்திருக்கிறேன்.என்னிடம் கருத்துகள் உள்ளன.ஆனால் அதனை சீனாவில் நிலையிலிருந்து மக்களிடம் இருந்து தான் புரட்சி உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.என மாவோ கூறினார்.

அதற்கு ஏற்ப இந்தியாவில் பிராமணியம் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த நேரத்தில் வந்த கம்யூனிஸமும் அவர்களிடத்தில் சென்று விட்டது. பொதுவுடமைக்குள் ஏற்றத்தாழ்வுகள்.ஆனால் தமிழகத்தின் நிலை வேறு கம்யூனிஸம் பட்டிதொட்டி எங்கும் பாமரமக்களிடையே சென்று சேர்ந்தது. தமிழக அரசியலில் ஒரு கம்யூனிஸ்ட் எம் எல் ஏ சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று எண்ணி பாருங்கள்.அவரும் சாமானியராக தான் இருப்பார். ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதனின் உயர்வுக்காகவும் நன்மைக்காகவும் பாடுபடுவதன் மூலம் அவன் தன்னை உயர்த்தி கொள்கிறான் என்ற மார்க்சின் வரிகள் இங்குள்ள கம்யூனிஸ்ட்களின் உயிர் மூச்சு.

பணக்கார வர்க்கம் தனக்கு ஏற்ப கம்யூனிஸசத்தை மாற்றிக்கொள்ளும்.ஆனால் பாமரனிடம் உள்ள கம்யூனிஸம் ஒரு போதும் வளைந்து கொடுப்பதில்லை. கேரளா கடவுளின் தேசம் , அந்த கடவுளின் தேசத்திலும் கம்யூனிஸமே ஓங்கி ஒலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *