• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செய்தியாளருக்கு நெத்தியடி பதில் கொடுத்த கோலி…

Byமதி

Oct 25, 2021

செய்தியாளர் சந்திப்பில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி அளித்த நெத்தியடி பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு காணொலி வாயிலான சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ரோகித் ஷர்மாவை நீக்கிவிட்டு நல்ல ஃபார்மில் உள்ள இஷான் கிஷானை அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத கோலி, நீங்கள் உண்மையாகத்தான் கேட்கிறீர்களா? இருபது ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை நீக்க வேண்டுமா என்று கேட்டு கிண்டலாகவும் சிரித்தார்.

மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால், தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அதற்கு ஏற்றாற்போல் பதில் அளிக்க வசதியாக இருக்கும், என்று கூறி செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார். கோலியின் இந்த பதிலுடன் கூடிய வீடியோ மற்றும் அவரது கிண்டலான, ஷாக் ரியாக்ஷன் போன்ற புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.