• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி அரசு சார்பில் மடிக்கணினிகளை வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 5, 2026

புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.

   காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட சுரக்குடி பகுதியில் அமைந்துள்ள தலைவர் பா சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி ஆர் என் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசின் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. அப்பள்ளியில் படித்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி எம் எஸ் ராஜசேகரன் ஆகியோர் வழங்கினர். 

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் புதுச்சேரி அரசு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளை கொண்டு மாணவர்கள் தங்களின் கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ளவும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார்.