• Tue. Feb 18th, 2025

14 ஆயிரம் முறை பந்தை கடத்தி குளோபல் உலக சாதனை

ByKalamegam Viswanathan

Dec 29, 2024

மதுரை திருநகரில் கைப்பந்தில் உலக சாதனைக்காக 14 ஆயிரம் முறை பந்தை கடத்தி மாணவர்கள் குளோபல் உலக சாதனை படைத்தனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் செல்போனில் மூழ்கும் பழக்கத்திலிருந்து விடுதலை சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி கைபந்தில் மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்தனர்.

திருநகரில் உள்ள கைப்பந்து மைதானத்தை மேம்படுத்த துணை முதல்வர் உதவிட கோரிக்கை –

தமிழக இளைஞர்களிடையே போதை ஒழிப்பு, செல்போன் மூழ்கும் பழகத்திலிருந்து மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக ஹேண்ட் பால் என்னும் கைப்பந்தை 14 ஆயிரத்து 154 முறை கடத்தி மதுரை திருநகர் அன்னை பூமி புரட்சிகர கை பந்து கழக மாணவர்கள் குளோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். உலக சாதனை படைத்த மாணவர்களை கைபந்து கழகம், சுற்றுசூழல் அமைப்பினர். பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர்.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் அன்னை பூமி புரட்சிகர கைப்பந்து கழகத்தின் சார்பில், இளைஞர்களிடையே போதை ஒழிப்பு, செல்போனில் மூழ்கும் பழகத்திலிருந்து மிட்டது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருநகர் அண்ணா பூங்காவில் ஹேண்ட் பால் எனப்படும் கைப்பந்து எறிதல் போட்டியில் ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் முறை பந்தை கடத்தி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

16 பேர் கொண்ட கைப்பந்து குழுவில் இரண்டு மாணவிகள் உட்பட 4 பேர் கொண்ட குழுவாக 4 அணியாக பிரிந்து குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான இந்த முயற்சியில் பங்கேற்றனர். இந்த போட்டி காலை 8.20 மணி முதல் தொடங்கி 9.20 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது,

இதுபோல் ஏற்கனவே ஜெர்மனியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 704 முறை பந்தை கடத்தி சாதனை படைத்துள்ளனர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஒரு மணி நேரம் நடைபெற்ற போட்டியில் 16 மாணவர்களும் 14, ஆயிரத்து 154 முறை பந்தை கடத்தி குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். ஆசிய அளவில் புதிய சாதனையை மதுரை திருநகர் அன்னை பூமி புரட்சிகர கைபந்து கழகத்தின் சாப்பில் நடைபெற்றது.

இதுகுறித்து அன்னை பூமி புரட்சிகர கைப்பந்து கழகநிறுவனர் அன்பரசன் கூறுகையில் இளம் தலைமுறை மாணவர்கள் போதை பழக்கத்திற்கும் செல்போன் விளையாட்டில் அடிமையாகி தங்களது உடல் நலம் மனநலத்தை எடுத்துக் கொள்கின்றனர் அவர்களை மாற்றி உடல் நலனும் சமூக நலன்,சுற்றுச்சூழல் மேம் பாட்டிற்காகவும் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட இந்த புதிய முயற்சி மேற்கொண்டோம்.

ஏற்கனவே ஜெர்மனியில் நடைபெற்ற கின்னஸ் சாதனையை முறியடிப்பதுடன் குளோபல் வேர்ல்ட் சாதனைக்காக இந்த முயற்சியில் ஒரு மணி நேரத்தில் 14 ஆயிரத்து 154 முறை கைப்பந்து வீசி சாதனை பிரிந்தனர்.இது அடுத்த முறையாக கின்னஸ் சாதனைக்கு தங்களை தயார் படுத்தஎடுத்துக்கொண்ட முயற்சி.

தமிழக முதல்வர் இளைஞர்களிடம் போதைப் பழக்கத்திலிருந்துதங்களை விடுவித்து உடல்நலம் பேணும் மறு கோரிக்கை விடுத்தார் அவனைத் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

திருநகர் கைப்பந்து கழகத்தின் சார்பில் பல்வேறு போட்டி பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இந்திய அளவில் ஒலிம்பிக் பயிற்சிக்கு தயாராகும் அளவிற்கு மாணவர்களுக்கு பயிற்சி வழக்குகிறோம்.

தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தங்களது விளையாட்டு துறையின் மூலம் உரிய பயிற்ச்சிக்கான விளையாட்டு திடல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் எங்களது பயிற்சி மையம் மிகவும் சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று பெருமை சேர்ப்போம் என அன்பரசன் கூறினார்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு குளோபல் உலக சாதனை புத்தக நிர்வாகி ராஜேஷ் சாதனை படைத்ததற்கான சான்றிதழ்களையும் கைபந்து பயிற்சியாளர் குமார் விருதுமடல்களையும் வழங்கினர். சாதனை படைத்த மாணவர்கள் உற்சாக குரலெழுப்பி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.