• Sun. Dec 3rd, 2023

தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை..!

ByA.Tamilselvan

Sep 5, 2022

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தமாகா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டி
பெரம்பலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேசும்போது..ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது. விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடியது. அதற்காக நான் மத்திய அரசை பாராட்டுகிறேன்.டெல்டா மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தமாகா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல அதனை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *