• Thu. May 9th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 8, 2022
  1. பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது?
    திருகு அளவி
  2. மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது?
    திருகு அளவி
  3. ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு———க்கு நேர் தகவில் இருக்கும்
    சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்
  4. ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?
    இயற்பியல் தராசு
  5. இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு?
    10 மி. கிராம்
  6. இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி——–எனப்படும்
    நிலைப்புள்ளி எனப்படும்
  7. திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு?
    0.01மி.மீ
  8. ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்——–எனப்படும்
    நிறை எனப்படும்
  9. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?
    கலிலியோ
  10. மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது?
    செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *