• Wed. May 8th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 7, 2022
  1. விசையின் அலகு என்ன?
    நியூட்டன்
  2. வேலையின் அலகு என்ன?
    ஜுல்
  3. பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?
    மோல்
  4. ஒளிச்செறிவின் அலகு என்ன?
    கேண்டிலா
  5. தளக்கோணத்தின் அலகு என்ன?
    ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)
  6. திண்மக் கோணத்தின் அலகு என்ன?
    ஸ்டிரேடியன்
  7. துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
    வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது?
  8. (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) – 1 மி.மீ – 0.9 மி.மீ – 0.01 செ.மீ
    வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    சுழிப்பிழை
  9. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    நேர் பிழை
  10. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    எதிர் பிழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *