தமிழகத்தில் ஊழல் ஆட்சி புரியும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
திண்டுக்கல்லில் அவர் பேசியதாவது:

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடி 60 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சிகளிலும் மோசடி நடந்துள்ளது. அதிமுக ஆட்சி வந்த உடன் இது குறித்து விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றிக்கு கூட வரி போட்டு அதில் சம்பாதித்த அரசாங்கம் திமுக அரசாங்கம்.
திமுக ஒரு கட்சி இல்லை அது கார்ப்பரேட் கம்பெனி. திமுகவில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது.
அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும்.
இது திமுக கட்சியில் நடக்குமா ? அதிமுக ஜனநாயக கட்சி. திமுகவை பொருத்தவரை அது குடும்பக் கட்சி. ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.













; ?>)
; ?>)
; ?>)