வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றியாக தான் இருக்கும். அதற்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் இருக்கும்.
அதன்படி 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்க தனுஷ், அமீர் சமுத்திரக்கனி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க வெளியான திரைப்படம் தான் வட சென்னை. ஆக்ஷன் கலந்து க்ரைம் கதையை மையமாக கொண்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெற்றிமாறனும் வட சென்னை 2ம் பாகத்திற்கான வேலையை எப்போதோ தொடங்கிவிட்டார். அந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. காரணம் இந்த கொரோனா என பல பிரச்சனைகளில் வேறு படங்களில் கமிட்டாகிவிட்டாராம். அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் வர இருப்பதால் எப்போதும் இந்த வட சென்னை 2 படப்பிடிப்பை தொடங்குவார் என தெரியவில்லையாம். கிட்டதட்ட படத்திற்கான 50 நிமிட காட்சிகள் முடிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.