அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் குவாரிகள் மீது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. அனுமதி வாங்கிய இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடங்களில் கனிம வளங்கள் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் போடி தாலுகா, சூலப்புரம் கிராமத்தில் இரண்டு விவசாய நிலங்களில் தினந்தோறும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சூலப்புரம் கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாய நிலங்களில் அனுமதி பெற்ற இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத இரண்டு இடங்களில் தினந்தோறும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே இந்த குவாரியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு நடத்தி 4 லாரிகள் மற்றும் நான்கு டிராக்டர் பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கத் துறை தேனி மாவட்ட உதவி இயக்குனர் கிருஷ்ணன் மோகன் மீண்டும் அந்த குவாரிக்கு அனுமதி வழங்கி உள்ளார்.
இதனால் மீண்டும் அனுமதி பெற்ற விவசாய நிலங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய ஆய்வுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன், ஆர்.ஐ முத்தமிழ் ஆய்வுக்கு செல்வதில்லை.
எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் குவாரிகள் மீது கனிம வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரும் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலரும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சூலப்புரம் குவாரி உரிமையாளர் கணேசன் கூறுகையில் நான் மட்டுமல்ல, தேனி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்துமே அனுமதி வாங்கிய இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடங்களிலே கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிரபலமான மணல் மாபியா ஏஜெண்டுகள் தேனி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் முன்பு உட்கார்ந்து கொண்டு கல், மண், மணல் குவாரி அதிபர்களிடம் ஒரு யூனிட்டுக்கு 1800 வீதம் வசூல் செய்து வருகின்றனர்.
கம்பெனிக்கு பணம் கட்டவில்லை என்றால் குவாரி உரிமையாளர்களுக்கு உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் குவாரி நடத்த அனுமதி மறுத்து வருகிறார்.
இது சம்பந்தமாக தேனி புவியியல் சுரங்கத்துறை மாவட்ட அதிகாரி கிருஷ்ணன் மோகனிடம் நேரடியாக கேட்ட போது அப்படி ஏதும் புகார் வரவில்லை புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
மேலும் அலுவலகத்தின் முன்பு கம்பெனி ஆட்கள் பணம் வாங்குவது எனக்கு எதுவும் தெரியாது கம்பெனி ஆட்கள் பணம் வாங்குவதாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மணல் மாபியா கும்பல் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ தேனியில் அனைத்து குவாரி உரிமையாளர்கள் உடனடியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி கிருஷ்ணன் மோகனிடம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.