

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காலிப்பணியிட விவரங்களை செப்டம்பர் 5க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
