செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சுரங்க உரிமைக்கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசே விதிக்கின்றது. தற்போது இதற்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடி கட்டண விகிதங்களை மாற்றி அமைக்கும். உரிமை கட்டணமும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டடம் மற்றும் சாலை அமைப்புக்கு பயன்படக்கூடிய ஜல்லி போன்றவற்றை எடுப்பதற்கு ஒரு கன மீட்டருக்கு 90 ரூபாய் என்ற அளவில் உரிமை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே கிராவல் மற்றும் மண் ஆகியவற்றுக்கு கன மீட்டருக்கு 56 ரூபாய் என்ற அளவிலும் கருப்பு கிரானைட் 5 ஆயிரத்து 210 என்ற விலையிலும் சாதாரண மண்ணுக்கு 160 ரூபாய் என்ற விலையிலும் உரிமை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.