

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர பட வரையாளர் மற்றும் லிப்ட் மெக்கானிக் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான கல்வி தகுதி 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிகள் முடிவடைந்த உடன் நேர்காணல் நடத்திய தொழில் நிறுவனங்களில் 100சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதனைத் தவிர 750 ரூபாய் மாதம் உதவித்தொகை, பாட புத்தகங்கள், வரைபடக் கருவி, இரண்டு ஜோடி சீருடைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மூடு காலனி ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும் எனவும் தங்கி பயல விடுதி வசதியும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
