• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 21, 2023
  1. கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
    குழூஉக்குறி
  2. ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
    முற்றியலுகரப் புணர்ச்சி
  3. இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
    கரியன்
  4. ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
    பாசடை
  5. அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
    பைந்தமிழ்
  6. தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
    வெற்றிலை
  7. இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
    மரம்
  8. திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
    மஞ்ஞை
  9. திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
    பெற்றம்
  10. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
    மதம்