• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 7, 2022
  1. தொழுஉரம் என்பது
    கால்நடைத்தீவனம், சானம், சிறுநீர் கலந்த மக்கிய கலவை
  2. வாலிஸ்னேரியா என்பது
    முழுவதும் மூழ்கிய நீர்த்தாவரம்
  3. தாவரவியலில் இந்தியாவில் தாவரப்பெருக்கத்திற்கான பணியில் கீழ்க்கண்டவர்களுள் புகழ்பெற்றவர் யார்?
    1.சந்திரபோஸ்
    2.ஷ{ல்
    3.எம். எஸ். சுவாமிநாதன்
    4.லக்ஷ்மி ஐயர்
    விடை
  4. எம். எஸ். சுவாமிநாதன்
  5. சில வறண்டநிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. இவற்றுள் அதைத் தேர்ந்தெடு.
    1.காகிதப்பூ
    2.ஒபன்ஷியா
    3.புல்
    4.பாஸிப்புளோரா
    விடை
  6. ஒபன்ஷியா
  7. இரவில் திறந்து பகலில் மூடும் இலைத்துளைகள் எவற்றில் இருக்கின்றன
    சதைப்பற்றுள்ள தாவரங்கள்
  8. தவறான பொருத்தத்தைக் கண்டறிக.(வினா விடைகள்)
    1.குலோரெல்லா – ஆல்கா
    2.பெனிசிலியம் – பாக்டீர்யம்
    3.அகாரிகஸ் – பூஞ்சைக் காளான்
    4.அஸ்னியா – லைக்கன்
    விடை
  9. பெனிசிலியம் – பாக்டீர்யம்
  10. தாவர உலகில் மிகப்பெரிய சூலைப் பெற்றுள்ள தாவரம்
    சைகஸ்
  11. பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுவது
    கடுகு
  12. தாவரவியல் கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கு கொள்வது எது?
    1.குளோரோபிளாஸ்ட்
    2.பெர்ராக்சிசோம்கள்
    3.மைட்டோகாண்டிரியா
    4.மேற்கண்ட அனைத்தும்
    விடை
    4.மேற்கண்ட அனைத்தும்
  13. தாவரங்களை, வாழிடத்தை அடிப்படையாக கொண்டு நீர்த்தாவரம், நீர்நிலத்தாவரம் மற்றும் வறண்ட நிலத் தாவரம் என்று வகைப்படுத்தியவர்
    வார்மிங்