• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 23, 2022
  1. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் என்ன?
    மதிபா
  2. கொடாக் கேமரா கம்பெனி எந்த நாட்டைச் சேர்ந்தது?
    அமெரிக்கா
  3. ‘மேகங்களின் இல்லம்’ என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?
    மேகாலயா
  4. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தக் கட்டிய டில்லி கட்டடக் கலைஞரின் பெயர் என்ன?
    கே.டி.ரவீந்திரன்
  5. வெறும் கால் ஓவியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    எம்.எஃப்.ஹ{சைன்
  6. குறிஞ்சிப்பூவின் நிறம் என்ன?
    ஊதா
  7. தமிழ்நாட்டின் தீவு எது?
    ராமேஸ்வரம்
  8. டால்கம் பவுடரை அறிமுகப்படுத்திய நாடு எது?
    இத்தாலி
  9. ராஜீவ்காந்தி நல்லிணக்க விருது எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
    1992
  10. இந்தியாவில் முதலில் எந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் எஸ்.டி.டி.வசதி ஏற்படுத்தப்பட்டது?
    கான்பூர் – லக்னோ