• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 16, 2024

1. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.? வள்ளலார் 

2. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம் 

3. யார் நடத்திய புரட்சியை கதைக் கருவாகக் கொண்டு “ஆனந்த மடம்” நாவல் தோன்றியது.? சன்னியாசிகள் 

4. இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் தாஜ்மஹாலை தோற்கடித்த இடம் எது ? மாமல்லபுரம் 

5. மகாத்மா காந்தியை நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என்று புகழ்ந்துரைத்தவர் யார்.? ஜீவானந்தம் 

6. இந்தியாவில் எந்த ஆண்டுடன் “தந்தி சேவை” நிறுத்தப்பட்டது.? 2013

7. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது.? இந்தியா 

8. அசாம் மாநிலத்தின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி எது.? பிரம்மபுத்திரா 

9. பிரியாணியை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் யார்.? பாரசீகர்கள்

10. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளிக்கூடம் எங்கு அமைந்துள்ளது.? மதுரை