

1) சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
2) சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே
3) கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்
4) மலர் என்றால் என்ன?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.
5) மிகப் பெரிய மஞ்சரியை (பூங்கொத்து) உடைய பூ எது?
சூரியகாந்தி
6) மஞ்சரி என்றால் என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
7) மலரின் உறுப்புகள் என்ன?
- பூவடிச் செதில்,
- பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
- புல்லிவட்டம், அல்லிவட்டம்,
- மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
8) மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
9) கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுவது?
காந்தள
10) அல்லி வகைகள் என்ன?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள் பகலில் மட்டுமே பூக்கும், ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.

