தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43 வது வணிகர் தினம் மாநில மாநாடு நடத்துவது குறித்து தேனியில் வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும்போது,
கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைன் வர்த்தகத்தால் எங்களது வியாபாரம் 35 சதவீதம் வரை சுரண்டப்பட்டு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தடுத்து சாமானிய வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். இதனை நிறைவேற்ற தவறினால் அகில இந்திய வணிகர் சங்கங்களை இணைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.
நாங்கள் 150 கிராம் பிஸ்கட்டை 20 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 130 கிரமாக குறைத்து 18 ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் வணிகர்களின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்படும் தங்களின் கோரிக்கைகளுக்குயார் தீர்வு காணப்படும் என கூறுகிறார்களோ அவர்களுக்கு எங்களது வாக்கு வங்கியை செலுத்த முடிவு செய்வோம்.

திமுக அரசு தங்களது கோரிக்கைகளை 60, 70% நிறைவேற்றி இருப்பதாகவும் மேலும் 30 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் வணிகர்களுக்கு எளிமையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் எங்கள் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணும் அரசியல் கட்சி கூட்டணிக்கு தான் எங்களது ஆதரவை தெரிவிப்போம் என தெரிவித்தார்.




