குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார் விஜயதாரணி. இவர் அண்மையில் பாஜக கட்சிக்கு தாவிய நிலையில், மக்களவைத் பொதுத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது.

விஜயதாரணி
அதிமுக, பாஜக சார்பில் இரண்டு பெண்கள் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாவது அறிவிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அண்மையில் குமரி மாவட்டம் மட்டுமே அல்ல தமிழகமே உற்று பார்த்தது. ஜெமினியின் கணவர் சேவியர் குமாரை. தேவாலயம் பங்கு தந்தை ராபின்சன், திமுக வை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் 15பேர் சேர்ந்து இவரது கணவர் கொலை செய்யப்பட்டார். ஜெமினி வேட்பாளராக்கப்பட்டது விளவங்கோடு தொகுதியில் ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.