• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் 6ல் ஜி பி முத்துவின் அலப்பறைகள்

ByA.Tamilselvan

Oct 13, 2022

பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியதும் முதல் ஆளாவதாக களம் இறங்கிய ஜிபி முத்து விற்காகவே ரசிகர்கள் பட்டாளம் பிக் பாஸை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சையமான ஜி பி முத்து செய்யும் செயல்கள் தற்போது மீம்ஸ்களாக சமூக வலைத்தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக ஜி பி முத்து அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாக வேண்டும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து இருந்தனர் .தற்போது அது நடைபெற்று இருக்கிறது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் செலிபிரிட்டிகள் முதல் ரசிகர்கள் வரை பலருக்கும் பரிச்சயமான ஒரே முகமாக ஜிபி முத்து இருந்து வருகிறார்.
கமலும் ஜிபி முத்துவின் ஃபேன் தானாம். ஜி பி முத்துவிடம் பிக் பாஸ் கெட்ட வார்த்தையை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க என்று கூறியதை வைத்து ஒரு மீம்ஸ் வெளியிட்டு இருக்கிறார்கள். வெள்ளந்தியான பேச்சால் பலரையும் ரசிக்க வைக்கும் ஜி பி முத்து பிக் பாஸ்க்கு பதிலாக பிக் பாக்ஸ் என்று அழைத்ததை வைத்து மீம்ஸ் ஒன்றை தட்டி விட்டிருக்கிறார்கள்.