• Mon. Jan 20th, 2025

ஊர் மக்களை கூட்டி வாழை இலை போட்டு சாப்பாடு

ByG.Suresh

Dec 29, 2024

கொட்டக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஐந்தாண்டு பதவி நிறைவு. ஆடல் பாடலுடன் ஊர் மக்களை கூட்டி ஊராட்சி மன்ற தலைவர் வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு மகிழ்ந்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிறைவுறுவதை ஒட்டி, ஐந்தாண்டுகள் ஒத்துழைப்பு தந்த கிராம மக்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி உடன் விருந்தளித்து உபசரித்த ஊராட்சி மன்ற தலைவர். மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் உணவு அருந்தி சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகில் உள்ள கொட்டக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவராக மகேஷ் என்பவர் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். கிராம மக்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிராம மக்களுக்கு செய்தி கொடுத்தார். இந்த நிலையில் ஜனவரி 5ம் தேதி உடன் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, கிராம மக்களை அனைவரையும் ஒன்று திரட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழை இலை போட்டு அவர்களுக்கு உணவளித்தார்.

இதனால் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு முன் கொட்ட குடியில் உள்ள புதிய ரேஷன்கடை கட்டிடத்தை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார்.