சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வளாகத்திற்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் திமுக நிர்வாகி என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதனை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மாவட்ட செயலாளர் அதிமுக மாவட்ட செயலாளர் சிவகங்கை தொகுதி எம்எல்ஏவும் ஆன செந்தில்நாதன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்ட நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தை தடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
