• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பறிமுதல் – கஞ்சா தொடர்பாக இரு பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை

ByP.Thangapandi

Dec 30, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணிடம் நடத்திய சோதனையில் அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது., மேலும் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த ராணி என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணியின் வீட்டிற்கு சென்ற போலிசார் அவரது வீட்டில் இருந்த சுமார் 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ராணி மற்றும் செல்வராணியையும் கைது செய்து போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.