• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மதுரா கண்டிகையில் கங்கையம்மன் ஆலய திருவிழா..,

ByPrabhu Sekar

May 25, 2026

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மதுரா கண்டிகையில் அமைந்துள்ள அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தில் மூன்று நாள் திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.

விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, நல்லம்பாக்கம் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிர் பால்குடம் எடுத்துச் சென்று கங்கையம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில், சுமார் 150-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தி பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கரகம் வர்ணிக்கப்பட்டு, கங்கையம்மன் கத்தி மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அருள் வாக்கும் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.