• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பிசியோதெரபிஸ்ட் காரில் கடத்திய கும்பல்..,

BySeenu

Jan 24, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (வயது 23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார்.

தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார். அங்கு இருந்து தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்தாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 21 ஆம் தேதி நவீன் சக்கரவர்த்தி அவரது நண்பர் பிரதீப் ஆகியோர் சாய்பாபா காலனி, பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு என்று பேசிக் கொண்டு இருந்தனர். அதன் பிறகு அவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக கலெக்டர் சிவகுமார் தெருவில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் சென்று உள்ளனர்.

அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் 3 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் நவீன் சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி காருக்குள் ஏற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் சத்தம் போட்டு உள்ளனர்.
இரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. இருவரையும் காரில் ஏற்றிச் சென்று அவர்கள் நவீன் சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ஆகியோரிடம் இருந்த செல்போன் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

காருக்குள் சிக்கிக் கொண்ட இருவராலும் அவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. கத்தி வைத்து மிரட்டியதால் இருவரும் காருக்குள் பயந்து நடுங்கி உள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் நவீன் சக்கரவர்த்தியிடம் பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளனர்.

ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.
அதன் பிறகு அவரது செல்போனில் இருந்து ஜி பே. மூலம், 20 ஆயிரம் பணத்தை அந்த கும்பல் மிரட்டி வாங்கி உள்ளது. கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் நகைகளை பறிகொடுத்த நவீன் சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ஆகியோர் காரிலேயே நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.

அதன் பிறகு அந்த கும்பல் மீண்டும் அவர்களை அதே இடத்தில் இறக்கிவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து நவீன் சக்கரவர்த்தி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நவீன் சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ஆகியோர் கூறிய அங்க அடையாளங்கள் மற்றும் செல்போன் நம் பர்கள் ஆகியவற்றின் மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.

அப்போது நவீன் சக்கரவர்த்தி மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பணம் நகைகளை பறித்து சென்றது விருதுநகர் மாவட்டம் மேல தெருவை சேர்ந்த கார்த்திக் ( வயது 25), கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (25), விருதுநகர் நந்தவனம் பட்டி பிரதீப் (23) என தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர்.

இதில் கார்த்திக் மற்றும் பிரதீப் ஆகியோர் தற்போது கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும், கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.