• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!!

Byகாயத்ரி

Aug 31, 2022

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன . மூலவர் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி வழிபாடு செய்தனர். நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறப்பு பூஜை
நடைபெற்றது. அதேபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் இன்று 150 கிலோ பிரமாண்ட கொழுக்கட்டை படையல் செய்யப்பட உள்ளது.