மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.