• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிறுவர்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி!

நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக மேள தாளத்துடன் சிறுவர்கள் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கவரும் விதமாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதேபோல் வீடுளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது.மேலும் விநாயகர் கோவில்கள், அரச மர விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.

இதில் பெண்கள்,குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்ட நிலையில் நாகர்கோவிலில் சிறுவர்கள் நடத்திய சதுர்த்தி ஊர்வலம் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடசேரி பகுதியில் உள்ள சிறுவர்கள் தங்களின் வீட்டு தெருவில் சிறிய வடிவில் உள்ள விநாயகரை வைத்து பூஜைகள் செய்து அந்த சிலையுடன் ஊர்வலம் நடத்தினார். இதில் சிறிய விநாயகர் வாகனம் தயார் செய்து வீதி வீதியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வு காண்போரை வியப்படைய செய்துள்ளது.