• Sat. Apr 27th, 2024

ஜி 20 தலைமை பொறுப்பு- ஐநாவில் இந்திய தூதர் பெருமிதம்

ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று ஐநாவில் இந்திய தூதர் தெரிவித்தார்.
ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுக்கும் இதன் தலைமை பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில், இந்த முறை இந்தியாவுக்கு தலைமை பொறுப்பு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் அந்தந்த நகரங்களில் உள்ள புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் அம்ப் கம்போஜ் இது குறித்து கூறியதாவது: அனைவரின் நல்வாழ்வுக்கான உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்க இந்தியா முயற்சிகும் இந்த வேளையில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *