• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு

Byகுமார்

Jan 9, 2022

கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

27 நிரந்தர சோதனைச் சாவடிகள் ,80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிசன் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.