• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அன்று முதல் இன்றுவரை! கோலிவுட்டில் காதலை கொண்டாடிய படங்கள்!

காதலிப்பவர்களுக்கு மட்டுதே தெரியும் காதலில் அழகு என்னவென்று! காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் வரம்! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோலிவுட்டில் மாறுபட்ட கோணங்களில் காதலை கொண்டாடிய படங்கள் பல! அப்படங்கள் சில குறித்து ஒரு பார்வை.

முதல் மரியாதை
காதலுக்கு வயது ஓர் தடையில்லை! எந்த வயதிலும் காதலுக்கு அழிவில்லை என்பதை சொன்ன கதைதான் முதல் மரியாதை. சிவாஜி, ராதா நடித்த இந்த திரைப்படம் இன்றளவும் காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாகவே உள்ளது.

காதல்கோட்டை
உருவம் சார்ந்த காதல் என்பதை தாண்டி, ‘பார்க்காமலே காதல்’ என்று புதுவிதமான காதலை அறிமுகப்படுத்திய திரைப்படம் காதல் கோட்டை. கடிதம் மூலம் காதலை வளர்த்து, படத்தின் இறுதிக்கட்டத்தில் இருவரும் சேர்வார்களா என்று வரை கொண்டுசென்று கிளைமாக்சில் இனிமையான இணைதலோடு முடிகிறது திரைப்படம்! அஜித், தேவயானி நடித்து பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது இப்படம். தமிழ் திரைக்கதையில் இது ஒரு புதிய பாராட்டத்தக்க முயற்சி எனலாம்.

காதலுக்கு மரியாதை
காதல் என்கிற மகத்தான சக்தியால் பின்னிப் பிணைந்து கட்டுண்ட இருவர் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்து காதலுக்கு மரியாதை கொடுத்த திரைப்படம். விஜய், ஷாலினி காதலின் பிரிவை உயிரோட்டத்துடன் நடமாடவிட்டு ஆர்ப்பரிக்க வைத்த படம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மனதில் என்றும் மரியாதை உண்டு.

சொல்லாமலே
1998 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன், கவுசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சொல்லாமலே. காதலுக்காக தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டு ஊமையாக மாறிவிடும் கிளைமாக்ஸ்காகவே படம் 100 நாட்கள் ஓடியது, என்பது குறிப்பிடத்தக்கது!

ஆட்டோகிராப்
ஒருவனுக்கு பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் தோன்றும் காதல்களும், அதை இழந்த வலியையும், அதற்கு நட்பு கொடுத்து ஆறுதல் தந்த திரைப்படம் ஆட்டோகிராப். இதில், சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடித்திருந்தனர்.

96
எல்லாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அதில், கொண்டாட ஒரு காதலும் இருக்கும். அந்த கடந்த கால நினைவுகளை மீட்டுத் கொடுத்து, கடந்த காலத்துக்கு கைபிடித்து அழைத்துச்சென்ற திரைப்படம் 96. விஜய்சேபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தை இளசு முதல் பெருசுவரை பெரிதும் கொண்டாடினர்.

முதல் நீ முடிவும் நீ
சமீபத்தில் வெளியாகி இளசுகள் கொண்டாடி வரும் திரைப்படம் முதல் நீ முடிவும் நீ. மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விசயங்களின் ஒன்று நினைவுகளை அசைப்போடுவது. எல்லோருக்கும் நமது பதின்பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. அப்படியாக 90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமா முதல் நீ முடிவும் நீ.