இந்தியில் பதில் எழுதும் மத்திய அமைச்சர்களுக்கு இனிநாம் தமிழ் பற்றை காட்டுவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி” அடர்னியா வெங்கடேசன் ஜி” என்று எம்.பி. சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியில் பதில் கடிதம் எழுதியுள்ளார். இதனை கண்டித்துள்ள வெங்கடேசன் “இந்தியில் பதில் எழுதக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியும் தங்களின் இந்தி பற்றை காண்பிக்கிறார்கள். இனிநாமும் அவரை “மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி ” என்று தமிழில் விளித்து எழுதலாம். அவரவர் தாய் மொழி அவரவர்க்கு உயர்ந்தது என பதிலடி கொடுத்துள்ளார்.
இனி நாமும் தமிழ் பற்றை காட்டுவோம்.. சு.வெங்கடேசன் எம்.பி.
