• Tue. Sep 17th, 2024

10-ந்தேதி முதல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

ByA.Tamilselvan

May 4, 2023

புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *