• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மூன்று தெய்வங்களின் அருள்பெற வெள்ளிக்கிழமை வழிபாடு!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய நாளாகும். பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும். எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும் என்றும், செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை.

வெள்ளிக்கிழமையின் சிறப்பு :
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். மேலும், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகி விடும். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த நற்பலன்களை தரும். வெள்ளிக்கிழமைதோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை