• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடிக்கடி அபராதம்.. குமுறும் வியாபாரிகள்!

By

Sep 7, 2021 ,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி அபாரதம் விதிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கொரோனா தடையால் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததாகவும், இதனால் அனைத்து வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழில் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திறக்கப்பட்ட கடைகளில் அரசு விதித்த கட்டுப்பாட்டு விதிகளின் படி வியாபாரம் செய்து வருவதாகவும், நாகர்கோவில் மாநகராட்சி சேர்ந்த சில அதிகாரிகள் கடைகளில் வந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை, முக்கவசம் அணியவில்லை எனக்கூறி பல்வேறு பொய் குற்றசாட்டுகளை கூறி 10ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சில அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேண்டுமென வியாபாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.