• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் நடைபெற்ற ஃப்ரீடம் ரன் மாரத்தான்..,

BySeenu

Aug 10, 2025

கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்” எனும் விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது..

வீ வொண்டர் வுமன் சார்பாக ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இதில், 10 மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் மாராத்தான் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரம் வாக்கத்தான் நிகழ்வும் நடைபெற்றது..

வீ வொண்டர் வுமனின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுனர் செல்லா ராகவேந்தரன்,எலக்ட் கவர்னர் மாருதி,டாட்டர்ஸ் மாவட்ட தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன்,வீ வொண்டர் வுமன் டிரஸ்ட் இயக்குனர் சண்முக பிரியா, சைபர் கிரைம் புலனாய்வாளரும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சங்கர்ராஜ் சுப்பிரமணியன்,ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.