• Sat. Oct 31st, 2026

தேனியில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்..,

ByAjmalkhan saleemraja

Oct 31, 2026

தேனி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமூக சேவகர் அனுஷா ரவி, குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

இந்த மருத்துவ முகாமில் பெண்களுக்காக இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மருத்துவர்களால் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. பெண்களின் உடல்நலம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில், தேனி நகர் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தகைய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் இதுபோன்ற சமூக நல மருத்துவ முகாம்கள் தேனி பகுதியில் மேலும் பல இடங்களில் நடத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.