• Sat. Oct 31st, 2026

தேனியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்..,

ByAjmalkhan saleemraja

Oct 30, 2026

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில், நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தியும், லஞ்சம் கொடுக்கக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாரத்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, லஞ்சம் கொடுக்க மாட்டோம், லஞ்சம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியைப் பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, தேனி நேரு சிலை முன்பாகத் தொடங்கிய மாரத்தான் போட்டி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பங்களாமேடு பகுதியில் நிறைவடைந்தது.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

லஞ்சம் தவிர்ப்போம்… நேர்மையான சமூகத்தை உருவாக்குவோம்!