• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

சோப்பு தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம்..,

ByE.Sathyamurthy

May 12, 2025

பெருநகர சென்னை மாநகராட்சி 14-ஆவது மண்டலம் 188 ஆவது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர் பகுதியில் எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியோ டிவ். மற்றும் ரோட்டரி கிளப் ஆப் அம்பத்தூர். சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த நிறுவனத்தின் சார்பாக. இயற்கையாக எந்த கலப்படமும் இல்லாமல், எப்படி சோப்பு தயாரிப்பது என்பதற்காக செய் முறையை நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு இந்த செய்முறை பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பெண்களுக்கு ஊக்குவிக்கும் வகையில். சென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும் 188 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான C.S.சமீனா செல்வம். அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு இந்த செய்முறையை நிகழ்ச்சியை தானும் கண்டு நெகிழ்ந்து போனார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி மாமன்ற உறுப்பினர் கூறுகையில், மகளிர் அனைவரும் இந்த பயிற்சியை கற்றுக் கொண்டு தானாக ஒரு தொழில் செய்யும் அளவிற்கு இந்த செய்முறை இருக்கிறது.

நானும் உங்களுடன் இணைந்து இதற்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்று நெகிழ்ச்சி பொங்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில். பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சான்றிதழும் பெற்று கொண்டு மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பயிற்சி எங்களுக்கு உதவுகிறது என்று மன நெகிழ்ச்சியுடன் கூறி சென்றனர்.