• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆனைமலை பேரூராட்சியில் இலவச மருத்துவமுகாம்..!

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண், இருதயம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.


ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற, இந்த மருத்துவ முகாமை ஆனைமலை மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அரசு வழக்கறிஞர் தேவசேனாதிபதி அவர்கள் துவக்கி வைத்தார். ஆனைமலை பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, அல்டாப்,பூபதி கண்ணன், ராமலிங்கம், சாகுல் ஹமீது மற்றும் வழக்கறிஞர் மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் கே வரதராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக துணைச் செயலாளர் நா. கார்த்திகேயன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஷா நவாஸ்கான், சட்டம் சாந்து, ஏ.பி.எஸ் விக்னேஸ்வரன், ரகுபதிஏ.ஜே.ரபிக், பக்ருதீன், உட்பட்ட பொதுமக்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.