ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் மற்றும் குருவம்மாள் இலவச மருத்துவமனை இணைந்து நடத்தும் 7வது இலவச பொது மருத்துவ முகாம் சலவை தொழிலாளர் சமுதாயத்திற்கு பாதிக்கப்பட்ட காளியம்மன் கோவில் ஊர் மண்டபத்தில் தலைவர் T.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக டால்பின் முருகதாசன் மற்றும் கௌரவ விருந்தினராக முன்னாள் உதவி ஆளுநர் சுப்ராம் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கு பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையும் அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளும் இலவசமாக நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வை நண்பர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் 31 ஆம் வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா ஸ்ரீதர் ஏற்பாடு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க செயலாளர் ராஜு நன்றி கூறினார்.