• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ByN.Ravi

Aug 25, 2024

மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை யொட்டி, இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது .
இந்த முகாமிற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நல்.கர்ணன், தங்கராஜ், ஒன்றிய நிர்வாகிகள் தெய்வேந்திரன் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். இந்த முகாமினை, மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஹர்ஷிதா தலைமையில் செவிலியர்கள் முத்துலட்சுமி, கயல்விழி, சங்கீதா, மாரீஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் சிவா, செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் 120 பேருக்கு கண் பரிசோதனை செய்து 50 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமில், தேமுதிக நிர்வாகிகள் சங்கு பிள்ளை, முருகன், குருநாதன், மூர்த்தி, அரிமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சோமநாதன் நன்றி கூறினார்.